kejriwal withdrew the case

அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

அரசியல் இந்தியா

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 22) வாபஸ் பெற்றுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால், அவர் எதற்கும் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “எனக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எதுவும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

நான் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜரானால் என்னை அவர்கள் கைது செய்யக்கூடாது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், நேற்றிரவு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.

அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த அவசர மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு முதலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு,

பின்னர் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திவேதி அடங்கிய 3 பேர் கொண்ட சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே கெஜ்ரிவால் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,

“டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை ஆஜர்படுத்த உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை வாபஸ் பெறுகிறோம்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சிங்வியின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏ.ஆர். ரகுமான் பாட… டைகர் ஷெராஃப் ஆட… : தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா!

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘குளோஸ்’ செய்த சீரியல் நடிகை… பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *