kejriwal submits resignation

கெஜ்ரிவால் ராஜினாமா… ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி

அரசியல் இந்தியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 17) மாலை டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கடந்த 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கெஜ்ரிவால், தனது பதவியை இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யப்போவதாக திடீரென அறிவித்தார்.

அதற்கு அவர், சில மாதங்களில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் நான் அமரமாட்டேன். என்னைப் பொறுத்தவரை, நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் முதல்வர் நாற்காலியில் உட்காருவேன் என்று காரணம் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் கல்வித்துறை அமைச்சர் அதிஷி சிங் அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று மாலை அதிஷி சிங்கும் அர்விந்த் கெஜ்ரிவாலும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தான் வகிக்கும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வி.கே.சக்சேனாவிடம் கொடுத்தார்.

மேலும், அமைச்சர் அதிஷி சிங் அடுத்த டெல்லி அரசாங்கத்தை அமைப்பதற்கான கடிதத்தை வி.கே. சக்சேனாவிடம் சமர்ப்பித்தார். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் ஆகப்போகிறார் அதிஷி சிங். இந்த நிகழ்வு டெல்லி அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

முப்பெரும் விழா… விருதுகள் வழங்கி கெளரவித்த ஸ்டாலின்

உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *