கெஜ்ரிவாலுக்கு பெயில் கிடைக்குமா? இடைக்கால உத்தரவு எப்போது?

Published On:

| By Selvam

ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி இரவு கைது செய்தது.

தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் கெஜ்ரிவால் உள்ளார். இந்தநிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று (மே 7) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு காலம் எடுத்தது?

இந்த வழக்கின் கோப்புகளை மாஜிஸ்திரேட்டு முன்பு தாக்கல் செய்தீர்களா?” என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மேலும், “தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு கெஜ்ரிவால் அலுவல் பணிகளை செய்ய அலுவலகத்துக்கு சென்றால் அது விளைவுகளை ஏற்படுத்தும்.

அவருக்கு ஜாமீன் வழங்கும் போது உத்தியோகபூர்வ பணிகளைச் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. இடைக்கால ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி யோசிப்போம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் மே 10-ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“சுருக்கமான திங்கள்”: சிஎஸ்ஐஆர் புதிய அறிவிப்பு!

ரசிகரை தாக்க முயன்ற ஷகிப் அல் ஹசன்: காரணம் என்ன? ஷாக் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel