புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லக்ஷ்மி தேவி மற்றும் விநாயக பெருமான் படங்களை அச்சிட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (அக்டோபர் 26) செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியாவில் புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தி புகைப்படம் ஒரு புறமும், விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவி படங்கள் மற்றொரு புறமும் இருக்குமாறு அச்சிட வேண்டும்.
இரண்டு தெய்வங்கள் புகைப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சிடுவதன் மூலம், இந்தியா பொருளாதாரத்தில் செழித்து விளங்கும்.
பொருளாதாரத்தை சீர்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும், சில சமயங்களில் தெய்வங்கள் நம்மை ஆசிர்வதிக்கவில்லை என்றால், நம் முயற்சிகள் பலனளிக்காது.
நமது ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லக்ஷ்மி தேவியின் புகைப்படங்கள் வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தோனேசியா போன்ற ஒரு முஸ்லீம் நாட்டில் ரூபாய் நோட்டுகளில் விநாயக பெருமானின் புகைப்படத்தை அச்சிடும்போது, ஏன் இந்தியாவில் தெய்வங்களின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட முடியாது?
இதுகுறித்து ஓரிரு நாட்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும். அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் கல்விக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்
கோவை கார் வெடிப்பு: தலைமைச் செயலாளருடன் டிஜிபி ஆலோசனை!
கோவை கார் வெடிப்பு : முபின் வீட்டில் சிக்கிய ரகசிய சீட்டு!
வடக்கத்தியான் எல்லோருமே கிறுக்குகளா?