தெலங்கானா: இரு தொகுதிகளிலும் பின் தங்கும் கே.சி.ஆர்.
நடந்து முடிந்த தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பொதுவாகவே வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டமாக தபால் ஓட்டுகளைத்தான் எண்ணுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், நேரில் வந்து வாக்களிக்க இயலாதவர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது,
அதன்படி தபால் ஓட்டுகளில் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகவும் மற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,
தெலங்கானாவில் காங்கிரஸ் 40, பி.ஆர்.எஸ், 27, பாஜக 5, ஓவைசி 1 என்ற அளவில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆரம்ப நிலவரத்தின்படி தெலங்கானாவின் தற்போதைய முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட காமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளார்.
தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் காம்ரெட்டி தொகுதியில் மட்டும் கே.சி.ஆர். பின் தங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அவர் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான கஜ்வெல் தொகுதியிலும் பின் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் ஓட்டு எண்ணிக்கையை அடுத்து, வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
2014 முதல் தொடர்ந்து இரண்டு முறை தெலங்கானாவின் முதலமைச்சராக வெற்றி பெற்றவர் கே.சி.ஆர். என்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரு உடல்… இரண்டு உயிர்… ரசிகர்களை கவர்ந்த ஆளவந்தான் புது ட்ரெய்லர்!
ஆலோசனை கூட்டம்: கரும்பு விவசாயிகள் அடுக்கிய புகார்கள்!