வேலூரில் திமுகவின் வெற்றிவாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அதற்கு திமுக தேர்தல் அறிக்கை முக்கியமான காரணியாக உள்ளது என அக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
வேலூர் மக்களைவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த ஒரு வார காலமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இன்று (ஏப்ரல் 1) குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார் குப்பம் பகுதியில் பொதுமக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி பரப்புரை மேற்கொண்டார்.
அனைத்து பகுதிகளுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கதிர் ஆனந்த் அளித்த பேட்டியில், “வேலூரில் மும்முனை போட்டியெல்லாம் இல்லை. இங்கு திமுகவின் வெற்றிவாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அதற்கு திமுக தேர்தல் அறிக்கை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது.
நகரங்கள் தாண்டி கிராம மக்களிடமும் மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பலை நிலவுகிறது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலைவாசி உயர்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி அமையும். அப்போது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 150 நாள் வேலைத்திட்டம் என திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்” என்று கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜனாதிபதிக்கு அவமரியாதை… பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!
தீவிரமாகும் ‘கச்சத்தீவு’ விவகாரம்: தமிழக அரசியல் தலைவர்கள் ரியாக்சன் என்ன?
Mrunal Thakur: தென்னிந்திய சென்ஷேசனலின் ‘சொத்து’ மதிப்பு இதுதான்!