அக்னி ஹோத்ரி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
2022 ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அதிகபட்ச வசூலை குவித்த இப்படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து பேசியது. சர்ச்சைகளை எதிர்கொண்ட இப்படத்துக்கு பாஜக கட்சி ஆதரவு தெரிவித்ததுடன், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
https://twitter.com/vivekagnihotri/status/1682594683799707650?s=20
இந்நிலையில் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘KashmirUNREPORTED’ என்ற டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்த வீடியோவில் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், “நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் மனிதராக இருந்தால், ‘மணிப்பூர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குங்கள்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, “என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எல்லா படத்தையும் நான் மட்டும் தான் எடுக்க வேண்டுமா? உங்கள் டீம் இந்தியாவில் யாரும் இயக்குநர் இல்லையா?” எனப் பதிவிட்டுள்ளார்.
Thanks for having so much faith in me. Par saari films mujhse hi banwaoge kya yaar? Tumhari ‘Team India’ mein koi ‘man enough’ filmmaker nahin hai kya? https://t.co/35U9FMf32G
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 21, 2023
பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விடக்கூடாது என்பதற்காக இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து I-N-D-I-A என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதனை மையப்படுத்தி விவேக் அக்னிஹோத்ரி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.
இராமானுஜம்
“மணிப்பூர் பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கை” – அண்ணாமலை
“லாக் டவுன் டைரி” டிரெய்லர்: ஸ்பெஷல் என்ன?
மணிப்பூர் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்