வாரணாசியில் நடைபெற இருக்கும் ’காசி-தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியை நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாசார தொடர்புகளைப் புதுப்பிக்கும் நோக்கில், அதாவது ’ஒரே நாடு ஒரே அமைப்பு என்ற உணர்வைக் கொண்டாடுவது’ மற்றும் ’தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், ’காசி-தமிழ்ச் சங்கமம்’ என்கிற நிகழ்ச்சிக்கு வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டர் மைதானத்தில் வரும் நவம்பர்19 தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்.

இதன்மூலம் காசிக்கும் (வாரணாசி) தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான அறிவுப் பிணைப்பையும், பழங்கால நாகரிகத் தொடர்பையும் மீட்டெடுக்க முடியும்.
முதல்வர் யோகி ஆதியநாத் ட்விட்!
ஒரு மாத காலம் வரை (நவ,17-டிச.16) நடைபெறும் இந்நிகழ்ச்சியை, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா, கலாசார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன்னுடைய சுட்டுரை பக்கத்தில், ”காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து ரயில்!
இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.
அதன்படி, முதலாவது ரயில் 216 பிரதிநிதிகளுடன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் 35 பிரதிநிதிகள் ராமேஸ்வரத்திலிருந்தும், 103 பேர் திருச்சிராப்பள்ளியிலிருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரிலிருந்தும் புறப்பட்டுச் சென்றனர்.
ஜெ.பிரகாஷ்
விஜய் ஹசாரே கோப்பை: தமிழக வீரர் ஹாட்ரிக் சதம்!
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!