முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் கரூர் தனியார் வங்கி மேலாளரிடம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 22) குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் சாட்சியம் அளித்திருந்த கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய தலைமை மேலாளரான ஹரிஷ்குமாரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கௌதமன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு, ஆவணங்கள், கவரிங் லெட்டர் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு வங்கி மேலாளர் பதில் அளித்தார்.
இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி அல்லி. இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்று செந்தில் பாலாஜி தரப்பினர் நம்பிக்கையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டிஜிட்டல் திண்ணை: இரண்டரை மணி நேர புயல்… திக்குமுக்காடிய அமைச்சர்கள்… ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
கொல்கத்தா மாணவி கொலை வழக்கு : “ஏன் இத்தனை குளறுபடிகள்?” நீதிபதி பர்திவாலா