கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் கலைஞருக்கு, நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கலைஞரின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய நினைவிடத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் இது தொடர்பான ஆய்வறிக்கைகள் இணைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
அந்தரங்கம்… டேட்டிங்… : வரம்பு மீறுகிறாரா கரண் ஜோகர்