திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… ‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்குக் காணிக்கை! -ஸ்டாலின் அழைப்பு!

அரசியல்

கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு மடல் எழுதியிருக்கிறார்.

அதில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு கோடியை எட்டியதைக் குறிப்பிட்டு நூற்றாண்டு நிறைவு விழாவில் செய்யவேண்டியதையும் பட்டியலிட்டுள்ளார்.

இன்று (மே 26) ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தின் சில பகுதிகள் இதோ…

“2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நிரந்தர ஓய்வுகொள்ளும் சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அன்றாடம் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

1 நபர் மற்றும் , ’உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனின் கலைஞர் 100 நிறைவு விழா மடல் கழகத் தலைவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடல் 1တ 2023 ஜன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜுன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன. திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது. 0000 mkstalin 備26.05.2024’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

மேலும்… “2023 ஜூன் 7 அன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டான வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டைக் கழக உடன்பிறப்புகள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘ஊர்தோறும் கலைஞர்’ என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும், கிளைகளிலும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றுதல், கலைஞர் செய்த சாதனைகளையும், தற்போதைய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுடன் தொகுதிகள்தோறும் தலைவர் கலைஞரின் மார்பளவுச் சிலையினை நிறுவுதல் என்ற திட்டமும் வகுத்தளிக்கப்பட்டு, பல மாவட்டங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள்.
விண்ணைத் தொடுவது போல நெடிதுயர்ந்த கொடி மரத்தில் இருவண்ணக் கொடி பிரம்மாண்டமாய் அசைந்தாடுவதைப் பல இடங்களில் கண்டிருப்பீர்கள்.

கலைஞர் நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் நாம் மேற்கொண்டுள்ள அரிய பணியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது

இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

1 நபர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.

அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது” என்று கூறியுள்ள ஸ்டாலின் நூற்றாண்டு நிறைவு விழாவை எப்படி கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வகுத்துள்ளார்.

“ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

2 பேர் மற்றும் , ’கலைஞர் 100: மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகள் கழகத் தலைவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடல். IC0 10 ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேருர்-கிளை ஒன்றிய-நகர கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தற்கு த்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக 'கலைஞர் 100' என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். 0000 mkstalin 岡26.05.2024’ எனச்சொல்லும் உரை இன் கிராபிக்ஸாக இருக்கக்கூடும்

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

IPL 2024 final: மொத்தப் பரிசுத்தொகை எவ்வளவு? முழுவிவரம் தெரிந்துகொள்வோமா?

டெல்லி: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 7 குழந்தைகள் பரிதாப பலி!

+1
0
+1
0
+1
1
+1
6
+1
0
+1
0
+1
0