தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பயண திட்டத்தில் முதல் கட்டமாக 200 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், “பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூலை 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வார்டுகளில் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளோம்.
என் மண் என் மக்கள் பயண திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதித்தோம். ஜூலை 28-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் என் மண் என் மக்கள் பயணத்தை துவக்கி வைக்க உள்ளார். கிராமப்புற பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் நகர பகுதிகளில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமான 200 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் செய்ய உள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” – அமைச்சர் உதயநிதி
கல்லூரிகளில் சேர்ந்து விலகும் மாணவர்கள்: யுஜிசி முக்கிய அறிவிப்பு!