China flag in DMK advertisement

பாஜக விளம்பரத்தில் கார்த்தி மனைவி.. திமுக விளம்பரத்தில் சீனா கொடி.. எங்கே நடந்தது தவறு?

அரசியல்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி திமுகவை கடுமையாக சாடினார்.

குறிப்பாக அந்த விழா குறித்து திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த செய்தித்தாள் விளம்பரத்தில் ஸ்டாலின் மற்றும் மோடி படத்திற்கு பின்புறத்தில் சீனக் கொடி பதித்த ராக்கெட்டின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அதைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, ”இதுதான் திமுகவின் நாட்டுப்பற்று. திமுக இந்திய அறிவியலையும் விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அந்த விளம்பரத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில், ”இந்த விளம்பரம் சீனாவின் மீதான திமுகவின் விசுவாசத்தையும், இந்திய இறையாண்மையை அவர்கள் புறந்தள்ளியிருப்பதையும் காட்டுகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி கொடுத்த பதில்!

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,

“இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர் எங்கிருந்து இந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. மேலும் இந்தியா சீனாவை எதிரி நாடாக அறிவித்து விட்டதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நமது பிரதமரே சீன அதிபரை மகாபலிபுரத்திற்கு அழைப்பு கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்.

உண்மையை ஏற்றுக் கொள்ள விரும்பாததால் நீங்கள் உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்ப பல்வேறு காரணங்களை கண்டுபிடிக்கிறீர்கள்” என்று கூறினார்.

பாஜக கொடுத்த விளம்பரம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பாஜகவின் ஒரு விளம்பரம் சர்ச்சைக்குரியதாக மாறியது. கடந்த 2021 மார்ச் 30 அன்று சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு வாக்கு கேட்டு, தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி விவாதத்திற்கு உள்ளானது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் ஒரு பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.

அவர் செம்மொழி பாடலுக்கு நடனமாடும் படத்தை எடுத்து பாஜக தனது விளம்பரத்தில் பயன்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி படத்தை பாஜக வாக்கு கேட்புக்காக பயன்படுத்தியது பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. பின்னர் பாஜக அந்த ட்வீட்டை டெலிட் செய்தது.

வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் விளம்பரங்கள் சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் உள்ளாவது குலசேகரப்பட்டினம் விவகாரத்தில் மட்டும் முதல்முறையாக நடப்பதல்ல. எனவே இதுபோன்ற சர்ச்சைகள் எழுப்பப்படுவதைத் தவிர்த்திட, அரசியல் பிரமுகர்கள் வடிவமைப்பிலும் கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியமல்லவா..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவேகானந்தன்

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் : 4 பேர் கைது… பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு!

காங்கிரஸில் இணைந்தார் தமாகா அசோகன்

திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

தமிழ்நாட்டின் ‘ஹாட்’ மாவட்டம் இதுதான்

+1
0
+1
2
+1
0
+1
4
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *