காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று ( ஜூலை 16 ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் . சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். கட்சி மற்றும் தொகுதி பணிகளை கவனித்து வந்த அவருக்கு நீர்க்கட்டி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் , பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மற்றும் கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தின் இல்லத்தில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எத்தனை முறை தான் சோதனை செய்வீர்கள் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்