கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
தபால் வாக்குகளில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 205 இடங்களின் முன்னிலை விவரங்கள் தெரியவந்துள்ளன.

இதில், களத்தில் இருந்து வரும் தகவல்படி, பாஜக 95, காங்கிரஸ் 85, மதஜ 23, மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
தேர்தல் ஆணையம் 145 இடங்களுக்கான முன்னிலை விவரங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, காங்கிரஸ் 65, பாஜக 62, மதஜ 18, மற்றவை 0 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
பிரியா
’எப்படி போட்டாலும் சிக்ஸர்’: சூர்யகுமாரை கண்டு மிரண்ட ரஷீத்கான்