கர்நாடக வெற்றி: காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்

Published On:

| By Jegadeesh

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விரிவுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் தற்போது ’ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பிகாரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது அவர் இன்று(மே 17) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்காக, சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ 2013-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியது.

2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த மாநிலங்களில் சில மாதங்களுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திருமண தேதியை அறிவித்த சர்வானந்த் குடும்பத்தினர்!

அரசாங்கம் கொடுக்குற 10 லட்சம் அப்பா கொடுக்குற 10 ரூபா மாதிரி வருமா?