தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக வெறும் 2.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசுவதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜுலை 4) டெல்லி செல்கிறார். அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை நாளை சந்தித்து பேச உள்ளார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் பேசுகையில், “கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மாதம் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட வேண்டும். இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடக அரசு பேசினால் வரவேற்போம். ஏன் தடுப்பணைக் கட்ட கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகளின் தீர்ப்பு என்ன?
குற்றவியல் சட்டம் அமலாக்கத் துறைக்கும் பொருந்தும்: நீதிபதி நிஷா பானு