கர்நாடக முதல்வர் யார்?: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரசியல் இந்தியா

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக டெல்லியில் அடுத்த முதல்வர் பதவி யாருக்கு கொடுப்பது என ஆலோசனை நடந்து வந்தது.

முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் சித்தராமையாவை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இன்று (மே 18) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “முதல்வர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை கர்நாடகாவின் முதல்வராக்க காங்கிரஸ் தலைவர் முடிவெடுத்துள்ளார்.

டி.கே.சிவக்குமார் கர்நாடக துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை அவர் காங்கிரஸ் தலைவராகவும் இருப்பார்.
பதவி ஏற்பு விழா வரும் மே 20ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் அமைச்சரவையும் பதவி ஏற்கும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் டிகே சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று சித்தராமையா மற்றும் கார்கேவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரியா

அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *