கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள 34 அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மே 20-ஆம் தேதி முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்று கொண்டனர். அப்போது 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களது ஆதரவாளர்களை நியமிப்பதற்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை டெல்லியில் சந்தித்தனர்.
இந்தநிலையில் 24 அமைச்சர்கள் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். மொத்தமுள்ள 34 அமைச்சர்களுக்கும் இன்று இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறை, அமைச்சரவை விவகாரங்கள், உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நீர்ப்பாசனத்துறை, பெங்களூரு நகர வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பரமேஷ்வரா – உள்துறை, ஹெச்.கே.பட்டீல் – சட்டத்துறை, கிருஷ்ண பைர் கவுடா – வருவாய்த்துறை, செல்வராயசுவாமி – வேளாண்துறை, வெங்கடேஷ் – கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ப்பு, மகாதேவப்பா – சமூக நலத்துறை, ஈஷ்வர் காந்த்ரே – வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல்துறை, கியாதசந்திரா ராஜகண்ணா – கூட்டுறவுத்துறை, தினேஷ் குண்டுராவ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சரணபசப்பா தர்சனபூர் – சிறு குறு தொழில்கள், சிவானந்த் பாட்டீல் – ஜவுளி, கரும்பு வளர்ச்சி மற்றும் விவசாய சந்தைப்படுத்துதல்,
திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா – கலால்துறை, மல்லிகார்ஜூன் – சுரங்கங்கள் மற்றும் புவியியல் தோட்டக்கலைத்துறை, தங்கடங்கி சிவராஜ் சங்கப்பா – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை, ஷரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல் – உயர் கல்வித்துறை, மங்கல் வைத்யா – மீன் வளம், துறைமுகங்கள் துறை, லெக்ஷ்மி ஹப்பால்கர் – குழந்தைகள், பெண்கள் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், ரஹீம் கான் – நகராட்சி நிர்வாகம், சுதாகர் – மருத்துவ கல்வி, சந்தோஷ் லாத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, போஸ் ராஜூ அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை, சுரேஷ் – நகர்ப்புற மேம்பாடு, நகர திட்டமிடல்,
மது பங்காரப்பா – ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி, , நாகேந்திரா – இளைஞர் நலன், விளையாட்டு, கன்னடா கலாச்சாரம், பாட்டீல் – நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை, முனியப்பா – உணவு, சிவில் சப்ளையஸ், நுகர்வோர் விவகாரங்கள், சதீஷ் ஜார்கிஹோலி – பொதுப்பணித்துறை, ராமலிங்க ரெட்டி – போக்குவரத்துறை, சமீர் அஹமது கான் – வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
செல்வம்
புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்
“அண்ணாமலையுடன் விவாதம் செய்ய தயார்”: பொன்முடி