காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எம்.பிக்கள் இன்று (செப்டம்பர் 21) சந்தித்தனர்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டாலும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் செப்டம்பர் 19-ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரி மனு அளித்தனர்.
இந்தநிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் காவிரி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் சித்தராமையா, டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில எம்.பிக்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சாய் பல்லவி