கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 111 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் 111 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 89 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெல்லப்போவது யார்?
என்னை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை : குமாரசாமி