கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 7 தொகுதியில் வெற்றியுடன் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதனைத்தொடர்ந்து எண்ணப்பட்ட இயந்திர வாக்குகளிலும் தொடர்ந்து முன்னிலை பெற்ற காங்கிரஸ் பகல் 12 மணி நேர நிலவரப்படி 7 இடங்களில் வெற்றியுடன் 122 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதே வேளையில் பாஜக 71, மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 மற்றும் பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பகல் 12 மணி நிலவர அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் 121 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 72 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 மற்றும் பிற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 11 மணி நிலவரம்!
கேரளா ஸ்டோரி… ரெட் ஜெயிண்ட் ஏன் வாங்கணும்? அண்ணாமலை கேள்வி!