கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 108 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
கள நிலவரப்படி, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காலை 10 மணி நிலவரப்படி 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் காங்கிரஸ் 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 85 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

தேர்தல் ஆணையம் அளித்துள்ள 202 தொகுதிகளுக்கான தகவலின் படி, காங்கிரஸ் 104 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 இடங்களிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் உத்தரவு!