கர்நாடகா தேர்தல்: மோடி – ராகுல் வெளியிட்ட வீடியோ!

அரசியல் இந்தியா

கர்நாடகாவில் நாளை 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “என் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. கர்நாடகாவை கட்டமைப்புள்ள வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இலக்கு வைத்துள்ளோம். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

நம்முடைய அடுத்த இலக்கு முதல் மூன்று இடத்தை பிடிக்க வேண்டும். கர்நாடகா 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

கர்நாடகாவை பொருளாதாரம், தொழில்துறையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக செயல்பட்டு வருகிறோம். கர்நாடகாவில் உள்ள ஒவ்வொருவரின் கனவும் என்னுடைய கனவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கர்நாடகாவில் நான் பாரத் ஜோடா யாத்திரையின் போது 557 கி.மீ நடைபயணம் செய்தேன்.

அங்கு நான் லட்சக்கணக்கான மக்களை சந்தித்தேன். கர்நாடகா இளைஞர்களிடம் பேசியபோது வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு குறித்து என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2000 இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

கடந்த ஐந்து வருட பாஜக அரசு 40 சதவிகித கமிஷன் அரசாகவே உள்ளது. மே 13-ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

கிச்சன் கீர்த்தனா: பன்னா

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “கர்நாடகா தேர்தல்: மோடி – ராகுல் வெளியிட்ட வீடியோ!

  1. பப்புவின் ராசதந்திரம் அத்தனையும் வேஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *