காங்கிரஸ் வெற்றி: மோடி வாழ்த்து!

Published On:

| By Selvam

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 119 இடங்களில் வெற்றி பெற்று 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக 55 இடங்களில் வெற்றியுடன் 8 இடங்களில் முன்னிலை, மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களில் வெற்றியுடன் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளதால் அதன் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து!

பாடநூல்களில் திருவருட்பா: அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel