கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
பாஜக சார்பில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும்,
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி – சி ஓட்டர்ஸ்,
பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஜீ நியூஸ் – மாட்ரிஸ், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு!
கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும், பாஜக 85, மதச்சார்பற்ற ஜனதா தளம் 32, மற்றவை 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
வாக்கு சதவிகிதம் அடிப்படையில் காங்கிரஸ் 40.22, பாஜக 35.5, மதச்சார்பற்ற ஜனதா தளம் 17.81 மற்ற கட்சிகள் 6.37 சதவிகித வாக்குகளை பெறும்.
ஏபிபி – சி ஓட்டர்ஸ் கருத்துக்கணிப்பு!
ஏபிபி – சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துகணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் 110-112 தொகுதிகளையும், பாஜக 73-82, மதச்சார்பற்ற ஜனதா தளம் 21-29 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
வாக்கு சதவிகிதம் அடிப்படையில் காங்கிரஸ் 40.2, பாஜக 36, மதச்சார்பற்ற ஜனதா தளம் 16.1 சதவிகிதம் வாக்குகளை பெறும்.
ஜீ நியூஸ் – மாட்ரிஸ் கருத்துக்கணிப்பு!
ஜீ நியூஸ் – மாட்ரிஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
பாஜக 103-118 தொகுதிகளிலும் காங்கிரஸ் 82-97, மதச்சார்பற்ற ஜனதா தளம் 28-33 மற்ற கட்சிகள் 1–4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
வாக்கு சதவிகிதம் அடிப்படையில் பாஜக 42 , காங்கிரஸ் 41, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 மற்ற கட்சிகள் 3 சதவிகித வாக்குகள் பெறும் என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
கர்நாடகா தேர்தல்: மோடி – ராகுல் வெளியிட்ட வீடியோ!
ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயக்குமார் காட்டம்!
