கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 29) காலை அறிவிக்க உள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னதாக மோடி சமுதாயத்தை அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு மக்களவை வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தசூழலில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா