கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்

அரசியல் இந்தியா

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இரவு 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவியது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியானது.

இரவு 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

செல்வம்

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளராக அமுதா நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *