கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 11 மணி நிலவரம்!

Published On:

| By christopher

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 116 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளைத் தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக தொடர்ந்து பின் தங்கி வருகிறது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 74  தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 மற்றும் பிற கட்சிகள் 7  தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

karnataka congress election result at 11 am update

தேர்தல் ஆணையம் 11 மணிக்கு 223 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ முன்னிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி  காங்கிரஸ் 117 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 71 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 மற்றும் பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 10 மணி நிலவரம்!

யார் முதல்வர்? கர்நாடக காங்கிரசில் தொடங்கிய அதிகார யுத்தம்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share