கர்நாடகாவில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் இன்று (மே 27) புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த மே 20 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமதுகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இருவரும் கடந்த 3 நாட்களாக டெல்லியில் கட்சித் தலைமை உடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் 24 அமைச்சர்களின் இறுதி பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தனர்.
24 அமைச்சர்களின் பெயர் பட்டியல்:
- எச்.கே.பாட்டீல்
- கிருஷ்ண பைரே கவுடா
- என் செல்வராயசுவாமி
- கே வெங்கடேஷ்
- எச்.சி.மகாதேவப்பா
- ஈஷ்வர் காந்த்ரே
- கியாதசந்திரா என்.ராஜணா
- தினேஷ் குண்டு ராவ்
- சரணபசப்பா தர்சனபூர்
- சிவானந்த் பாட்டீல்
- திம்மாபூர் ராமப்பா பாலப்பா
- எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்
- தங்கடகி சிவராஜ் சங்கப்பா
- சரணபிரகாஷ் ருத்ரப்பா
- பாட்டீல் மங்கல் வைத்யா
- லக்ஷ்மி ஆர் ஹெப்பால்கர்
- ரஹீம் கான்
- டி.சுதாகர்
- சந்தோஷ் எஸ் லாட்
- என்.எஸ்.போசராஜு
- சுரேஷ் பி.எஸ்
- மது பங்காரப்பா
- டாக்டர். எம்.சி.சுதாகர்
- பி.நாகேந்திரன்
இன்று மாலைக்குள் அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுவிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா