கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒரு தொகுதியிலும், ஓ.பன்னீர் செல்வம் மூன்று தொகுதியிலும் தங்களது வேட்பாளரை அறிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி தொகுதியில் கர்நாடகா மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புலிகேசி தொகுதியில் கர்நாடகா மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் , காந்திநகர் தொகுதியில் மாநில கழக செயலாளர் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் கழக தலைவர் அனந்தராஜ் என மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
புலிகேசி தொகுதி ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு ஏற்கப்பட்டது.
கோலார் தங்கவயல் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் வேட்புமனு சுயேட்சையாக போட்டியிட ஏற்கப்பட்டுள்ளது.

காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாரின் வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தும் கர்நாடக தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காந்திநகர் தொகுதி வேட்பாளர் குமாரின் வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டுள்ளது எடப்பாடி தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
கொரோனா பரவல்: தமிழகத்துக்கு மத்திய அரசு கடிதம்!
புல்வாமா தாக்குதல்: “மத்திய அரசு கடமை தவறிவிட்டது”: சரத்பவார்