மத்திய அரசு தமிழகத்திற்குக் கூடுதல் பேரிடர் நிதி ஒதுக்கினால் ரூ.20 ஆயிரம் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க தயாராக உள்ளோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (டிசம்பர் 17) தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலை தொகுதி 121-வது வட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.இந்தியாவில் விவசாயிகள் மற்றும் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சாதி மற்றும் மத மோதலை தூண்டிவிடுவதால் அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்குக் கூடுதல் பேரிடர் நிதி ஒதுக்கினால் ரூ.20 ஆயிரம் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க தயாராக உள்ளோம். அதனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மழை, வெள்ள பாதிப்பால் மக்களுக்கு நிவாரண தொகை வழங்குகிறோம். இதற்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை” என்று கனிமொழி பதிலளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாவட்டங்களில் விடாமல் பெய்யும் கனமழை: விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை!
’பாதிக்கப்பட்ட மீனவர்களே கழிவை அகற்றுவது மனித தன்மையற்ற செயல்” : கமல்