தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் படம் ஓடிக்கொண்டிருந்தால் அவரது நடிப்பை பாராட்டி கன்னத்தை கிள்ளி கலைஞர் முத்தமிடுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் இன்று (ஜூன் 4) திமுக மகளிரணி சார்பில் பராசக்தி திரைப்படம் மறுதிரையிடல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “பராசக்தி என்பது சாதாரணமாக அனைவரும் கடந்து போக முடியாத திரைப்படமாகும். சென்சார் போர்டை தாண்டி படம் வெளியாவதற்கு பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சமூகத்தை உலுக்கக்கூடிய வகையில் வசனங்கள் அமைந்தது. அம்பாள் எந்த காலத்தில் பேசினாள் என்று கேள்வி கேட்க கலைஞருக்கு தைரியம் இருந்தது. மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு தான் படம் திரைக்கு வந்தது. படத்தை விமர்சித்தவர்கள் படம் வெளியான பிறகு பாராட்டினார்கள். ஓராண்டுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மக்களின் வரவேற்பை பெற்றது. கலைஞர் தான் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர். தொலைக்காட்சியில் அவரது படம் ஓடிக்கொண்டிருந்தால் எழுந்து போய் அவரது நடிப்பை பாராட்டி கன்னத்தை கிள்ளி முத்தமிடுவார்.
தமிழ் சினிமாவில் பெண் கதாப்பாத்திரங்களை ஹூரோ பின்னால் அலையும் நடிகைகளாக தான் காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால் பராசக்தி திரைப்படத்தில் நாயகனுக்கு பகுத்தறிவை சொல்லித்தந்து, அவனை நெறிப்படுத்தும் கதாபாத்திரமாக நாயகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த இடத்திலும் நாயகி தன்னை சமரசம் செய்து கொள்ள மாட்டார். தமிழ் திரையுலகத்திற்கு மிக புதுமையான கதாபாத்திரமாக அமைந்தது. ஒரு பெண் மீது அவளது உரிமையில்லாமல் கை வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: மத்திய அரசை சாடிய திருமா
“முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்?” – ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்!