தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்ற கண்டுபிடிப்பு குறித்து மத்திய அரசு வாய்த்திறக்கவில்லை என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இன்று (பிப்ரவரி 3) குற்றம்சாட்டியுள்ளார். comment iron age tamil nadu
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
மக்களவையில் கனிமொழி எம்.பி பேசும்போது, “உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் உயிரிழந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். comment iron age tamil nadu
மத்திய, மாநில அரசுகள் அந்த மக்களை பாதுகாக்க தவறிவிட்டது. மதமும், அரசியலும் கலக்கும்போது மக்கள் துயரமடைவார்கள் என்பதற்கு இதுவே சான்று. இன்னும் கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று விளக்கமளிக்கவில்லை. ஒருவேளை டெல்லி தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்களோ? இது ஒரு மனிதாபிமானமற்ற செயலல்லவா?
இந்தியாவின் வரலாற்றைப் பற்றி நீங்கள் பேசும்போது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்தியாவில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தொடங்கியது என்று ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஆனால், இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்றுவரை மத்திய அரசு வாய்த்திறக்கவில்லை. இது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். திராவிட மரபின் மகத்தான மரபை நீங்கள் மறைக்க நினைக்கிறீர்கள்” என்று தெரிவித்தார். comment iron age tamil nadu