வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வெளியிட்ட கருத்து, திமுகவுக்குள்ளும், திமுகவுக்கு வெளியே அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நேற்று (அக்டோபர் 6) வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க சுமார் 15 லட்சம் பேர் மெரினாவில் கூடினர்.
இதில் நுற்றுக்கும் அதிகமானோர் வெயில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் துயரச் சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்…
“சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
கனிமொழியின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
காதலை முதலில் சொன்னது யார்? – அஜித் ஷாலினி பற்றி வெளி வந்த ரகசியம்!
காசா – இஸ்ரேல் போர் : ஒரு வருடம் நிறைவு… 365 நாட்களில் 42 ஆயிரம் பேர் பலி!
மெரினாவில் நடந்த உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு : எடப்பாடி பழனிசாமி