நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகை குண்டு வீசப்பட்டது திட்டமிட்ட தாக்குதல் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (டிசம்பர் 13) குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் அவைக்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் அவை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறும்போது, “பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இருவர் அவைக்குள் குதித்தார்கள். அதில் ஒருவரை அங்கிருந்த அவைக்காவலர் உடனடியாக பிடித்துவிட்டார். மற்றொருவர் அவையில் இருந்த மேஜை மேல் தாவி குதித்தார். இருவரும் தங்கள் கையில் புகை வெளியிடும் சிலிண்டர் வைத்திருந்தனர்.
இது மிகவும் சீரியசான பாதுகாப்பு அத்துமீறல். அவர்கள் கையில் துப்பாக்கியோ, வெடிகுண்டோ எடுத்து வந்தால் எங்களது நிலை என்னாகும். நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி ஒரு பேனா கூட எடுத்து போக முடியாது.
இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் இது ஒரு திட்டமிட்ட நிகழ்வு தான். கேலரியில் இருந்து குதிப்பதற்கு இடைவெளி மிக குறைவாக இருக்கிறது என்று இன்று தான் தெரியவந்துள்ளது. அதனை யாரும் சிந்தித்து கூட பார்க்கவில்லை. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவையில் நுழைந்த இருவர் : எம்.பி.க்கள் மீது வண்ண புகை வெடி வீச்சு!
ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாமா?