தனது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி எம்.பி மரியாதை செலுத்தினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று (ஜனவரி 5) தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நேற்று வரை கனிமொழி நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னைக்கு வந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சூரியின் கருடன் ஷூட்டிங் ஓவர்… யாரோட கதையில நடிச்சிருக்காரு பாருங்க!
வந்த வரைக்கும் லாபம்… ரூபாய் 16 லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர்!