ஷர்மிளா பணி நீக்கம்: போனில் தொடர்பு கொண்டு உறுதியளித்த கனிமொழி

Published On:

| By christopher

வேலையில் இருந்து இன்று (ஜூன் 23) நீக்கப்பட்ட பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஷர்மிளா சமீபத்தில் தனியார் பேருந்து ஓட்டி மிகவும் பிரபலம் அடைந்தார்.

பேருந்தை வழக்கமாக ஆண்கள் ஓட்டி வரும் சூழலில் ஷர்மிளாவின் உழைப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது. சமூகவலைதளங்களில் அவர் பேருந்து ஓட்டி செல்லும் காட்சிகள் வைரலானது.

இதனையடுத்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டிய பஸ்சில் சிறிது தூரம் பயணித்து அவரை பாராட்டினார்.

அவரைத் தொடர்ந்து கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியும் இன்று ஷர்மிளா ஓட்டும் தனியார் பேருந்தில் பயணித்தார்.

காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை கனிமொழி பயணம் செய்தார். அப்போது ஷர்மிளாவை பாராட்டிய கனிமொழி, கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அவர் பேருந்தில் இருந்து இறங்கிய சில மணி நேரத்தில் ஷர்மிளா ஓட்டுனர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கப்பட்ட செய்திக்கு தனியார் பேருந்தின் உரிமையாளர் துரைக்கண்ணு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிமொழி எம்.பி பேசியுள்ளார். அப்போது வேறுவேலைக்கு தான் நிச்சயம் ஏற்பாடு செய்து தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டிசிஎஸ் நிறுவனத்தை உலுக்கிய லஞ்ச முறைகேடு: வசமாக சிக்கிய 4 அதிகாரிகள்!

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel