காஞ்சிபுரத்தில் திமுக 75-ஆம் ஆண்டு பவள விழா பொதுக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 28) விமரிசையாக நடைபெற்றது.
இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, துணை பொதுச்செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
ஆனால் திமுகவின் ஒரே பெண் துணை பொதுச்செயலாளரும், முதலமைச்சரின் தங்கையுமான கனிமொழி எம்.பி பங்கேற்காதது திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது.
இதுதொடர்பாக கனிமொழி தரப்பில் விசாரித்தபோது, மறைந்த மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
அதே போன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் சீதாராம் யெச்சூரிக்கு டெல்லியில் நேற்று இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். அதனால் தான் அவர் காஞ்சிபுரத்தில் நடந்த பவளவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை” என அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா