மீனவர் பிரச்சினையை தீர்த்த நாடுகள்… பட்டியல் போட்ட கனிமொழி

Published On:

| By Aara

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில்  திமுக சார்பில் இன்று (பிப்ரவரி 16) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. kanimozhi list countries fishermen

இதில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி,

மீனவர்கள் பேச்சுவார்த்தை எப்போது?

“ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பும்போது எந்த பதிலும் சொல்லப்படுவதில்லை. எந்த அக்கறையும் காட்டப்படுவதில்லை. தொடர்ந்து நம்முடைய மீனவர்களும்  நம்முடைய முதலமைச்சரும்  வைக்கக்கூடிய கோரிக்கை… இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.  

நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும் போதும் மீனவர்கள் பிரச்சனையை எழுப்ப தவறியதே இல்லை. பிரதமர் இங்கே வரும்போதும், நமது முதலமைச்சர் அண்ணன் தளபதி டெல்லி செல்லும் போதும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தான் நாம் வைத்துக் கொண்டிருக்கிற கோரிக்கை.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு இதை ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையிலான தீர்க்கவே முடியாத பிரச்சனையைப் போல, அவர்கள் கருத்துக்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். kanimozhi list countries fishermen

தீர்க்க முடியாததா மீனவர் பிரச்சினை?

நான் கேட்கிறேன்… நார்வே-  ரஷ்யா இரண்டு நாடுகளுக்கு இடையே Barents Sea எனப்படும்  ஒரு சிறிய கடல் பகுதி தான் இருக்கிறது.

அங்கே இரண்டு நாட்டு மீனவர்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன் பிடிக்கிறார்கள். அவர்களுக்கு இடையிலும் பிரச்சினை இருந்தது. ஆனால் இரண்டு நாடுகளும் மீனவர்களின் ஆலோசனையின் படி அங்கு இருக்கக்கூடிய பிரச்சனைக்கு தீர்வு கண்டு இன்று அவர்கள் அமைதியாக எந்த பிரச்சினையும் இல்லாமல்,  யாரும் கைது செய்யப்படாமல்,  யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் அவர்கள் அங்கே மீன்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலே இருக்கக்கூடிய கடல் பகுதியிலே இரண்டு நாட்டு மீனவர்களும் அமைதியாக மீன்பிடித்து கொண்டிருக்கிறார்கள்.  இரண்டு நாடுகளும் தலையிட்டு பிரச்சினைகளை சரி செய்து அந்த மீனவர்களுக்கு பாதுகாப்பை உருவாக்கித் தந்திருக்கின்றன.

இதே போல் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலே இருக்கக்கூடிய கடல் பகுதியிலே… பொதுவாகவே பிரச்சனைகளை கொண்டிருக்கக் கூடிய நாடுகளின் மீனவர்களும் பிரச்சனை இல்லாமல் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார் கள்.

ஐஸ்லாந்து-  கிரீன் லேண்ட் நாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய கடல் பகுதியில்… மீனவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன் பிடிக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கருதியதால் மீனவர்கள் இப்போது மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். kanimozhi list countries fishermen

தீர்வு காண மறுக்கும் ஒன்றிய அரசு!

இப்படி பல நாடுகளுக்கு இடையில் தீர்க்கப்பட்டு இருக்கிற பிரச்சனை தான் இது. ஏதோ தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்துக் கொடுக்குமாறு நாம் கேட்கவில்லை.

எத்தனையோ நாடுகளில் மீனவர்கள் கடல் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை எல்லாம் தாண்டி… நிம்மதியாக,  அமைதியாக,  எந்தவித பாதிப்பும் இல்லாமல் அச்சுறுத்தல் இல்லாமல் மீன்பிடி தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த நிலையை அந்த பாதுகாப்பை அந்த அமைதியை அந்த நிரந்தர தீர்வைதான் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால் ஒன்றிய அரசாங்கம் திரும்பத் திரும்ப… இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் என அனைவரும் குரல் எழுப்பிய பிறகும் தீர்வு காண மறுக்கிறது. நேற்று என்னிடம் வைத்த கோரிக்கையின்படி, மீனவர் சங்கத்தினரை விரைவில் முதலமைச்சர் சந்திப்பார்” என்று பேசினார் கனிமொழி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share