சென்னை அமைந்தகரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, கூட்டம் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குக்கு வந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதல் வரிசையில் அமர்ந்தார்.
அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் , பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கியதும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து தலைவராக மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று பேரும் மேடையில் இருந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், திமுகவின் முதன்மை செயலாளராக நேருவுக்கு நிகர் நேரு என்று போற்றப்படும் நேரு அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்தார் மு.க.ஸ்டாலின்.
ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகின்றனர்.
டெல்லியில் ஒலிக்க கூடிய கர்ஜனை ஒலி கனிமொழி, புதிதாக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்தார் மு.க.ஸ்டாலின்.
இரண்டாவது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்
பொதுக்குழு அரங்கத்துக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்