சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யான கங்கனா ரனாவத்தை சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக இன்று (ஜூன் 6) புகாரளித்துள்ளார்.
கங்கனா ரனாவத் வெற்றி
நடிகையான கங்கனா ரனாவத் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தேர்தல் முடிவில், அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 73,703 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.
கங்கனா ரனாவத் புகார்
மாண்டி தொகுதியின் எம்.பி. கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து டெல்லி செல்வதற்காக இன்று (ஜூன் 6) சண்டிகர் விமான நிலையம் வந்தார்.
அப்போது, சண்டிகர் விமான நிலையத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளை “காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்று கங்கனா ரனாவத் அழைத்ததாக கூறி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தன்னை தாக்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்கனா ரனாவத் புகாரளித்துள்ளார்.
அதே சமயம், கங்கனா ரனாவத் தன்னை தாக்கியதாக கூறி அந்த சிஐஎஸ்எஃப் அதிகாரியும் புகாரளித்துள்ளார்.
இதன் காரணமாக, சண்டிகர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், கங்கனா ரனாவத் அங்கிருந்து கிளம்பி டெல்லி சென்றார்.
இதுதொடர்பாக கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து அதிக தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பாதுகாப்பு சோதனையின் போது நடந்த சம்பவம் அது.
பாதுகாப்புச் சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் CISF பாதுகாப்பு காவலர் பக்கத்தில் வந்து என் கன்னத்தில் அறைந்து தவறாகப் பேசத் தொடங்கினார். ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.
இந்தநிலையில், கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த CISF பாதுகாப்பு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பதவிய காப்பாத்திக்கோங்க அண்ணாமலை” – அதிமுக தாக்கு!
சவுக்கு சங்கர் வழக்கு: டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உத்தரவு!