சமூக வலைதளங்களில் பரபரப்பாக பதிவுகளை வெளியிடக் கூடியவர் நடிகை கங்கணா ரணாவத். தான் சார்ந்துள்ள சினிமாவை கடந்து அரசியல், சமூகம் என எல்லா தளங்களிலும் இவரது கருத்துகளும், விமர்சனங்கள் விவாதத்தை ஏற்படுத்தும்.
பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்த கங்கணா ரணாவத் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக அவரது சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கங்கணா, ”நடிகர் அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக அதே அளவு அன்பு தனக்குத்தான் கிடைத்து வருகிறது” என கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க வால் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் செய்யும் பல விஷயங்களும் இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தன்னை அவர் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனா ரணாவத்தை கேலி செய்து வருகின்றனர்.
She is equally self-obsessed as Modi. pic.twitter.com/priA5VJgIw
— Narundar (@NarundarM) May 5, 2024
சமீபத்தில் மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான்! ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, சினிமா துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான்! இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்றார் கங்கனா ரணாவத்.
இந்த விஷயம்தான் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்னைக்கு எவ்வளவு?
பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர புதிய கட்டுப்பாடுகள்!