காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட நிர்வாகிகள், நகரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றியச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று (அக்டோபர் 1) மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாகவும் அறிவித்தனர்.
இந்த ராஜினாமா அறிவிப்பு மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!
கூட்டாட்சியை உருவாக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின்