pm modi in srirangam

தமிழில் கம்பராமாயண பாராயணம்: ரசித்து கேட்ட பிரதமர் மோடி

அரசியல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டார். மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஜனவரி 20) காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். pm modi in srirangam

சாமி தரிசனத்திற்கு பின்னர் கம்ப ராமாயண பாராயணத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அங்கு தமிழில் பாடப்படும் கம்ப ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

பின்னர் மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். ராமநாதசுவாமி கோவிலிலும் ராமாயண பாராயணத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு செல்லும் போது மராத்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடைபெற்ற ராமாயண பாராயணத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும் ராமாயண பாராயணங்களில் கலந்து கொள்கிறார்.

ராமாயண பாராயண நிகழ்ச்சிகளில் அறிஞர்கள் எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள், சமஸ்கிருதம், அவதி, காஷ்மீரி, குர்முகி, அசாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தியில் ராமகதைகளை (ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிய அத்தியாயத்தை விவரிக்கும் வரிகள்) பாராயணம் செய்வார்கள்.

தொடர்ந்து இன்று மாலை ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறும் பஜனை சந்தியா நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

ஜனவரி 21 அன்று தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார்.

தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் செல்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மாநாட்டுக்குத் தயாராகும் சேலம்… மலைக்க வைக்கும் ஏற்பாடுகள்!

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

100 புதிய பேருந்து சேவைகள்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

அந்த சிஎஸ்கே வீரர் பந்தயத்திலேயே இல்லை… முன்னாள் வீரர் ஓபன் டாக்!

pm modi in srirangam

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *