ராகுல் காந்தியின் அழைப்பு: கமல்ஹாசனின் முடிவு!

அரசியல்

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் நிறைவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

“கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு, பூத் கமிட்டி, 2024 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றிப் பேசப்பட்டது.

ஒரு முக்கியப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். அதைப்பற்றி கட்சிக்காரர்கள் தகவல் தெரிவிப்பார்கள். கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மவுரியா செய்தியாளர்களிடம் பேசினார். “டெல்லியில் வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்து கொள்ள உள்ளோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள ராகுல் காந்தி, அவரது கைப்பட எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கானது அல்ல. இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு யாத்திரை” என்று கூறினார்.

மோனிஷா

நாட்டையே அதிர வைக்கும் ஒரு கொலை: ஜார்கண்டில் பயங்கரம்!

நடுவானில் பெண் பயணிக்கு நெஞ்சுவலி: சென்னையில் தரையிறங்கிய விமானம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.