சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை இன்று (டிசம்பர் 17) கமல்ஹாசன் படகு மூலம் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின்போது சென்னை எண்ணூர் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆறு மற்றும் கடல் முகத்துவாரத்தில் படர்ந்தது.
இதனால் அங்குள்ள மீனவர்களின் வீடுகள் மற்றும் படகுகள் சேதமாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகளை மும்பை நிறுவனத்தைச் சேர்ந்த 6 வல்லுநர் குழுவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிக்காக அதிநவீன படகுகள், அங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகள், ஜேசிபிகள், ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை சுமார் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழ்நாடு அரசு வரும் 19ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கமல் நேரில் ஆய்வு!
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’மெட்ரோவில் இன்று 5 ரூபாயில் எங்கும் போகலாம்’: ஆனால் நிபந்தனையை மறந்துறாதீங்க!