எப்படி இருக்கிறார் கமல்?

அரசியல்


உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டும், அரசியலிலும், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பிஸியாக இருக்கிறார்.

கடந்த 20ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற மூத்த இயக்குநர் k.விஸ்வநாத் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சோர்வாகவே இருந்துள்ளது. இதனால் நேற்று போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓரிரு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி கூறியிருக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் இன்று (நவம்பர் 24) பிற்பகல் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட ராமச்சந்திரா மருத்துவமனை, “23.11.2022 அன்று சளி, இருமல் மற்றும் லேசான காய்ச்சலுடன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து வருகிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று காலையிலேயே கமல் வீடு திரும்பியதாகத் தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்னும் ஒரு சில நாட்கள் மருத்துவமனையிலிருந்தபடியே தான் சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

துணிவு vs வாரிசு: உலக அளவில் போட்டி!

எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட கவி குவேம்பு இலக்கிய விருது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.