வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிரஸ் மீட் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்சப் மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு அமைச்சரவையில் மே 11ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மே 12ஆம் தேதி கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் பதவியில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டதை வரவேற்ற அண்ணாமலை… அதே நேரம் நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
பிடிஆர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் முதலமைச்சரின் முதல் குடும்பம் தான் தவறு செய்துள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.
இது மட்டுமல்ல… மெட்ரோ ரயில் திட்டத்தில் ஸ்டாலின் லஞ்சம் பெற்றார் என்று கூறியதற்காக தமிழக அரசு தரப்பில் தன் மீது அவதூறு வழக்கு தொடுக்கப் பட்டிருப்பதைப் பற்றி பேசிய அண்ணாமலை, ‘அது அவதூறு என்றால் பி டி ஆர் பேசிய ஆடியோவை வெளியிட்டதும் அவதூறு தான்.
அதனால் அந்த ஆடியோ வெளியிட்டதற்காகவும் என் மேல் முதல்வர் இன்னொரு அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும். அப்படி தொடுத்தால் பி டி ஆர் பேசிய இன்னும் ஒரு மணி நேர ஆடியோ இருக்கிறது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்’ என்று தெரிவித்தார்.
மேலும், பிடிஆர் பாஜகவில் இணைய அழைப்பு விடுகிறீர்களா என்று கேட்டபோது, ‘நாங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் கமலாலயத்தின் கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கிறது. யாரும் எங்களை நோக்கி வரலாம்’ என்று பதிலளித்தார் அண்ணாமலை.
ஒரு பக்கம் பி டி ஆர் மீது தவறு இல்லை என்றும், அவர் பேசிய ஒரு மணி நேர ஆடியோ டேப் தன்னிடம் இருக்கிறது என்று கூறுகிற அண்ணாமலை… இன்னொரு பக்கம் பிடிஆருக்காக கமலாலயத்தின் கதவு திறந்தே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மின்னம்பலத்தில் பிடிஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் வீடியோ வரை என்ற செய்தியில்… ஆர் எஸ் எஸ் அறிவு ஜீவிகள் டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பிடிஆரை சந்தித்து அவருக்கு வலை வீசியது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.
அப்போதுதான் பிடிஆரின் உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் பிடிஆருக்கு ஆர். எஸ். எஸ். வலை விரித்ததை மே 12 ஆம் தேதி தனது கமலாலய பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை.
அதே நேரம் பிடிஆர் தரப்பில் என்ன நடக்கிறது என்று விசாரித்த போது… அமைச்சரவை மாற்றப்பட்ட மே 11ஆம் தேதி இரவு இரண்டு மணி வரை தனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்பி இருக்கிறார் பிடிஆர்.
நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘நான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை கட்சியிலேயே பல பேர் சமூக வலைதளங்களில் எதிர்க்கிறார்கள்.
மக்களவைத் தேர்தல் வரைக்கும் நான் இந்த துறையை வகிப்பேன். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் நான் நிதியமைச்சர் பொறுப்புக்கு வருவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து வாட்ஸ் அப் ஆஃப்லைன் போனது.
நாளை தேர்தல் ரிசல்ட்: திருவண்ணாமலையில் டி.கே.சிவக்குமார் தரிசனம்!
பிறந்தநாள்: எடப்பாடியை திணறவைத்த தொண்டர்கள்!
இங்கு ஓநாயாக ஆடு உருமாறி இருக்கிறது. பிடிஆரின் பொறுப்பு என்ன என்பதை எதிர்கட்சி முடிவு செய்யமுடியாது. அவர் எங்கு சென்றாலும் ஆப்பு உறுதி. அளவு மட்டும் மாறலாம்.
இங்கு ஓநாயாக ஆடு உருமாறி இருக்கிறது. பிடிஆரின் பொறுப்பு என்ன என்பதை எதிர்கட்சி முடியாது. அவர் எங்கு சென்றாலும் ஆப்பு உறுதி. அளவு மட்டும் மாறலாம்.