ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடைத்தேர்தல் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோர இருப்பதாகக் கூறினார்.
கமலிடம் நேரம் கேட்டிருப்பதாகவும், அவர் நேரம் ஒதுக்கியதும் சந்தித்து தனக்கு இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைக்க இருப்பதாக இளங்கோவன் கூறினார்.
காங்கிரசுடன்,கமல்ஹாசன் இணக்கமாக உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா?
அல்லது தனித்து போட்டியிடுவரா? என்பது குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசத்து முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
ஸ்டாலின் விருப்பம் தேர்தலில் போட்டி: இளங்கோவன் பேட்டி!
அரக்கோணம் கிரேன் விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!